ஆசிரியர் பெயர்: ப.வரலஷ்மி.

பதவி : ஆங்கில பட்டதாரி ஆசிரியை.

பள்ளி : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கருங்குழி (கிழக்கு).

ஒன்றியம் : மதுராந்தகம்.

மாவட்டம் : செங்கல்பட்டு.

கல்வி 40 ,காஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் Qtpi இணைந்து நடத்திய  எந்திரன் பயிற்சி 2021 மார்ச் 5,6 ஆகிய தினங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பங்கு கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டியது.

எளிமையும் புதுமையும் கையாண்டு கணினி மூலமும் கியூபிட்ஸ் மூலமும் கோடிங் செய்து அதை ரோபோட்டிக் கிட் மூலமாக செயல்படுத்திக் காட்டியது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.நமது கைபேசியில் புதியதாக ஒரு App உருவாக்க வழிவகை செய்தது. நமது கைபேசியை ஒரு ரிமோட்டாக மாற்றி Remote Control Car, Remote Control Car with Slider உருவாக்க செய்து அதை செயல்படுத்திக் காட்டி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தி, தொடர் பயிற்சிகள் மேலும் மெருகூட்டியது.

ROBOTICS TRAINING FOR GOVT.SCHOOL STUDENTS AND TEACHERS.

அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களது ஆர்வத்தையும் தூண்டி குழந்தைகளோடு குழந்தைகளாக ஒன்றுகூடி பயிற்சியில் கற்றலை மேற்கொள்ள செய்தது மிகவும் சிறப்பு.

தொடர் கற்றலுக்கு பிறகு ஒரு ஆசிரியர் அவரது பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் என Live coding மூலமாக தனது திறமையை வெளிப்படுத்த செய்தது அடுத்த படிநிலை.

அதனைத் தொடர்ந்து  Live coding Designer,Blocks interface ஆகிய இரு பகுதிகளையும்ஆசிரியர்கள் முழுமையாக செய்யும் விதமாக ஊக்கப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 23 மே 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு “Voice Controlled Home Automation”மூலமாக வீட்டில் இருக்கக்கூடிய மின்விசிறி,  விளக்குகளை நமது குரல் மூலமாக கட்டுப்படுத்துவதற்கான coding  செய்வதற்கு அரிய வாய்ப்பு கிட்டியது.

அதன் செயல்முறை விளக்கம் கொடுத்து பின்பு வெற்றிகரமாக செய்தும் காண்பிக்கப்பட்டது, அது மட்டுமல்லாமல் நமது வீட்டில் இருக்கக்கூடிய குளிரூட்டும் கருவி, டிஜிட்டல் கடிகாரம், தொலைக்காட்சிப் பெட்டி, சிசிடிவி கேமரா,ஒலிப்பான், மகிழுந்து மற்றும் கைபேசி ஆகியவற்றையும் நமது குரல் மூலமாக கட்டுப்படுத்த முடியும் என்பதை அறியச் செய்தது.

கல்வி 40 “எளிய வழியில்,புதுமை கல்வியை அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கைபேசி செயலியை வழங்கிய திரு.பிரேம்குமார் ஐயா அவர்களுக்கும்,அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றமே தனது குறிக்கோளாய் கொண்டு அறிவியல் சார்ந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் அதை சார்ந்த திறன்களை வளர்க்கும் விதமாய் போட்டிகளை நடத்தி மாணவர்களை எதிர்கால செம்மையான தூண்களாகவும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி சார்ந்த பயிற்சிகளையும் அளித்துவரும் ”காஞ்சி டிஜிட்டல் டீம்” தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பழகன் ஐயா அவர்களுக்கும் QtPi-இந்திரன் பயிற்சியினை அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எட்டாக்கனியினை எட்டிப்பிடிக்கும் விதமாக வழங்கிய திரு.ஜெய்சன் ஐயா  மற்றும் திரு.தினேஷ் ஐயா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.