வே.கவிதா ,

கணித பட்டதாரி ஆசிரியை  ,

மேல்பிள்ளையார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி,

காஞ்சிபுரம் ஒன்றியம்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

மாணவச் செல்வங்கள்

P.மனோகரன், எட்டாம் வகுப்பு,

L.கோகுல் பிரகாஷ், ஆறாம் வகுப்பு.

பழங்காலத்திலேயே காஞ்சி மரங்கள் நிறைந்த,பல்கலைக்கழகங்கள் அமைந்த கல்வியில் சிறந்த கல்வி மாநகராம்,காஞ்சியில் ஓர் எந்திரனின் மாயாஜாலம் . ஆம்! ரோபோட்டிக்ஸ் எந்திரனின் மாயாஜாலம் தான்.

அரசுப் பள்ளி குழந்தைகளின் வருங்காலத்தை செதுக்கும் சிற்பியாம்,கல்வி 40 செயலியின் நிறுவனர் திரு.பிரேம்குமார் அவர்களின் மூலம்,அரசு பள்ளி குழந்தைகளின் கனவை நனவாக்கும் காஞ்சி டிஜிட்டல் டீமின்  முதன்மை ஒருங்கிணைப்பாளர்  திரு. N.அன்பழகன் அவர்களின் வழியே  அரசு பள்ளி குழந்தைகளின் ஏக்கங்களை நீக்கி, அவர்கள் உள்ளங்கையில் அமுது அளித்த Qtpi உடன் 5 .3.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்  அவர்கள்  வாழ்த்துக்கள் வழங்க, எந்திரன் ரோபோட்டிக்ஸ் பயிற்சி இனிதே துவங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்திரன் ரோபோடிக்ஸ் பயிற்சி மாயாஜாலமாகவே தோன்றியது.

திரு. தினேஷ் sir மற்றும் திரு. ஜெய்சன் sir அவர்கள் அளித்த  Enthiran Robotics கற்றல் கற்பித்தல் பயிற்சியின் தாக்கமானது, அரசுப் பள்ளி குழந்தைகளின் உள்ளங்கையில் கோடிங் உலகம் உதயமானது. இப்பயிற்சியில் 20 ஆசிரியர்களும் 25 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

எம் பள்ளி மாணவச் செல்வங்கள் மனோகரன் மற்றும் கோகுல் பிரகாஷ் இருவருக்கும் மகிழ்ச்சியான, சுவையான கற்றல்-கற்பித்தல் சூழ்நிலை அமைய , மிக்க ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் மிக எளிதில் கோடிங் புரோகிராமை கற்றுக்கொண்டு தானியங்கி கார்களை இயக்கினர், மகிழ்ந்தனர், பிறரை மகிழ்வித்தனர்  . செவிக்கு அமுது அளித்ததோடு மட்டுமல்லாமல் வயிற்றுக்கும் சுவையான உணவு அப்பயிற்சியில் அளிக்கப்பட்டது, முழுமையான மனநிறைவு தான். இப்பயிற்சி அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே விளங்கியது. என்னே ஒரு மாயாஜாலம்! மாயவிந்தை!

நிலவை  எட்டி பிடித்தாற்போல் எம் பள்ளி மாணவச் செல்வங்கள் மகிழ்ந்து கோடிங் ப்ரோக்ராம் செய்ய கற்று கொண்டனர் .

ஏப்ரல் 25ஆம் தேதி QTPI நேரலையில் தமிழ் வழியில்  Rc car with indicator என்ற ப்ரோக்ராம் கோடிங் செய்து அசத்தினர்.மாணவச் செல்வங்கள், ஆசான்கள் ஆக மாறி கற்பிக்கும்போது அந்த ஆசானுக்கு கிடைக்கும் பெருமைக்கு ஈடு இணை உண்டோ!

மாணவர்களின் தனித்திறமைகளை  வெளிக்கொணர்ந்த கல்வி 40 ,காஞ்சி  டிஜிட்டல் டீம் மற்றும் QtPi க்கும்  மேல்பிள்ளையார் பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.