23rd AMBASSADOR-PUMS KALAKKATTUR-M.ANUSHA,N.EZHILARASI .CLASS 7

‌   பட்டு நகரம்,கோயில் நகரம்,பழமையான நகரம்,பாரம்பரிய நகரம்  என காஞ்சிக்கு பல சிறப்புண்டு.அத்தகைய காஞ்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது 5.03.2021 அன்று தொடங்கப்பட்ட" PROJECT ENTHIRAN'' எனும் பயிற்சிப் பட்டறை.

அரசுப்பள்ளியில் பயிலும் 25 மாணவர்களுக்கும் ,அரசுப்பள்ளியில் பணியாற்றும் 20 ஆசிரியர்களுக்கும் காஞ்சி டிஜிட்டல் டீம் வழியாக பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்தது  கல்வி40.

சிறிதளவு சுமையும் தெரியாமல் ,சுவையாக கற்றுக்கொடுத்தது  Mr. Jaison Leon & Team  QtPi Robotics ,Bangalore.

காஞ்சி டிஜிட்டல் டீமின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.N.அன்பழகன்,கல்வி 40  நிறுவனர் திரு.G. பிரேம்குமார் ,QtPi யின்  திரு.ஜெய்சன்,திரு.P.தினேஷ் அனைவருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகள் சார்பில் நன்றிகள் பல.

சிறப்பான இந்த பயிற்சியில் சேரும் நல்வாய்ப்பு காஞ்சி டிஜிட்டல் டீம் மூலம் எனக்கும் ,எங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி களக்காட்டூர் மாணவிகள் ம.அனுஷா மற்றும் நா.எழிலரசி இருவருக்கும் கிடைத்தது.

மாணவர்கள் ஆச்சர்யமாய்ப் பார்த்த தானியங்கிக் கார்களை ,அரை மணிக்குள் அவர்களே செய்யும் அதிசயத்தை செய்தனர் Mr.Jaison Leon &Team.

குழப்பமாய்ப் பார்த்த Coding Program ஐ குதூகலத்துடன் செய்ய வைத்து கூட்டாக ரசித்தனர் திரு .தினேஷும் ,திரு ஜெய்சனும்.

அறுசுவை உணவுடன் அருமையாக நிறைவடைந்தது இரண்டு நாட்கள் பயிற்சி

." எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்" என்பதை மாற்றி "கணினியும் குறியீடும் கண்ணெணத் தகும்" எனுமளவிற்கு குறியீட்டுப் பயிற்சியை ஆர்வத்துடன் கற்றனர் அனுஷாவும் ,எழிலரசியும்.

தானியங்கிக் காருக்கான You tube வீடியோவை இரண்டே நாட்களில் எளிதாக செய்தனர்

.QtPi  யின் 23வது   தூதர்களாக நியமனம் ஆனார்கள் அனுஷாவும் எழிலரசியும்.

ஏப்ரல் 4ந் தேதி ஸ்லைடரைப் பயன்படுத்தி வேகத்தைக் கட்டுப்படுத்தும்  தானியங்கிக் கார் குறியீட்டை  முகநூல் நேரலை நிகழ்ச்சியில் நேர்த்தியாகச் செய்தனர்.

மாணவிகள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.கிராமமே கொண்டாடியது.உறவினர்கள் உள்ளம் மகிழ்ந்தனர்.பெற்றோர்கள் பேரின்பம் அடைந்தனர்.

ஆயிரமாயிரம் செலவு செய்து ,ஆங்கிலத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு எளிமையான,ஏழ்மையான,கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்த அதிசயம் காஞ்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.தொடர் வகுப்புகள் இணையவழியில்  தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது.

அதிசயத்தை செய்த காஞ்சி டிஜிட்டல் டீம்,கல்வி 40,QtPi  அனைவருக்கும் மீண்டும் நன்றி.

பெ.கெஜவல்லி,

பட்டதாரி ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி களக்காட்டூர்,

காஞ்சிபுரம் ஒன்றியம்,காஞ்சிபுரம் மாவட்டம்.